Chemsexல் ஈடுபடும் நபர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான எங்களுடைய விரிவான e-கற்கை தொகுப்பிற்கு உங்களை வரவேற்கிறோம்.
இந்த கற்கை தொகுப்பு chemsexன் வரலாறு, இதில் ஈடுபடுவதற்கான உந்துகை, மற்றும் எழக்கூடிய சவால்களை பற்றிய ஆழமான அறிவைப் பெறுவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைகிறது.
இப்பாடத் தொகுப்பின் முடிவில் chemsexல் ஈடுபடும் நபர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதங்கள் மற்றும் முன்தீர்ப்புக்கள் இன்றி சேவைகளை வழங்குவதற்குத் தேவையான திறனை மற்றும் நுண்ணறிவுகளை நீங்கள் பெறுவீர்கள்.
இக்கற்கை தொகுப்பு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த ஆர்வமுள்ளவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது - அதனுடன் chemsexல் ஈடுபடும் நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அணுகுமுறையை நோக்கி, உங்களுடைய முதற்படியாக அமையலாம்.
இந்த கற்கை தொகுப்பு நேர்மறையான சுகாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே chemsexல் ஈடுபடுபவர்களின் உடல் மற்றும் உளநல ஆரோக்கியத்தில் chemsexன் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளது.
.Chemsex அல்லது போதைப்பொருள் தொடர்பான 'தீங்கு குறைப்பு' என்ற எண்ணக்கரு, chemsexல் ஈடுபடுபவர்கள் அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைப்பதற்காக, தீர்புத்திறன் அல்லாத இன்றி கல்விசார் தகவல்களை வழங்க முற்படும் ஒரு கருத்தாகும். இது எந்த வகையிலும் chemsexஐ ஊக்குவிக்கவோ அல்லது போதைப்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவோ முயல்வதில்லை
இந்த கற்கை தொகுப்பின் முதன்மை நோக்கம், குறிப்பாக இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு, பாதுகாப்புடன் உடலுறவை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கும் ஆரோக்கியமான உடல், பாலியல் மற்றும் உளநல வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதாகும்.
இந்த e-கற்கை தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள தலைப்புகள்:
Chemsex என்றால் என்ன?
இந்த தொகுப்பில் நீங்கள் chemsexன் வரலாறு, அதை வரையறுப்பது எவ்வாறு, மற்றும் வெவ்வேறு சூழல்களில் அந்த வரையறை எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். Chemsex தொடர்பாக சில அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Chemsexல் ஈடுபடுவதற்கான காரணங்கள் என்ன?
இந்தப் பகுதியில் Chemsexஐப் பற்றி சில தவறான கருத்துக்களைப் பற்றி விவாதிக்கப்படும். மக்கள் ஏன் Chemsexஇல் ஈடுபடுகிறார்கள், அவர்கள் அதை செய்வதற்கான சில காரணங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
Chemsexல் உள்ள ஆபத்துகள்
இந்த அத்தியாயம், chemsexல் ஈடுபடும் நபர்கள் பொதுவாக அனுபவிக்கக் கூடியசவால்களை வகைப்படுத்த உதவும். Chemsexல் ஈடுபடும் நபர்களை ஆதரவளிப்பதற்கு தீங்கு-குறைப்பு தலையீடுகளை வடிவமைக்கத் தொடங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Chemsexல் ஈடுபடும் நபர்களுடன் எவ்வகையான முன்தீர்ப்புக்கள் இன்றி தொடர்புகளை ஏற்படுத்த பங்கேற்பாளர்கள் (சமூக சேவை பணியாளர்கள் (outreach workers), தன்னார்வலர்கள் (volunteers), சுகாதார துறை அதிகாரிகள் (Health Sector Officers) ஊக்குவிக்கப்பட்டாலும், chemsexல் ஈடுபடுவது ஆபத்துக்களை கொண்ட நடத்தைப் போக்கு என்பதை நினைவில் கொள்ளவும். இந்த தொகுப்பு chemsexல் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. Chemsexல் ஈடுபடுபவர்களிடையே, பாதுகாப்பான வகையில் தீங்குகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளையே இந்தத் தொகுப்பு வழங்குகிறது. இலங்கையிலுள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பான சட்டங்களை கவனத்தில் கொள்ளவும்.